பூமியும் மாய குளறுபடிகளும்
- Vedavith Goc
- Jun 30
- 2 min read
பூமி என்பது, நல்லதும் தீயதுமான பல சக்திகள் ஒன்றாக இணைந்து அதாவது இருளும் ஒளியுமாகிய பரிணாமங்களால் உருவானது.
இதனால் பூமியில் பல மாய குளறுபடிகள் நடக்கிறது.இதில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனின் வடிவமாகவே இருக்கிறது மேலும் ஒவ்வொரு மனிதரும் இருள் மற்றும் ஒளியின் கலவை யை பெற்று உள்ளனர்
இதனால் ஒரு மனிதர் ஆத்ம உச்ச நிலையில் மரணித்தால் அவரால் விண்ணுலகம் செல்ல இயலாது.
அதாவது ஒரு மனிதர் பெரும் ஆசை யாலோ, பெரும் கோபத்தாலோ,பெரும் மோகத்தாலோ, பெரும் பக்தியாலோ ,பெரும் பயத்தாலோ அல்லது ஏதேனும் மாய சக்தி கொண்ட மனிதராலோ மரணம் ஏற்படுமாயின் அது இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டாலும் ,கொலை செய்ய பட்டாலும் ,தீடிர் உயிர் இழப்போ அனாலும் கூட அவர்களால் இறந்த பிறகு ஒளி உலகத்திலோ அல்லது இருள் உலகத்திலோ பிரவேசிக்க முடியாமல் பூமியில் கால சக்ரத்தில் மாட்டி கொண்டு நடந்த நிகழ்வே மீண்டும் நடை பெறுகிறது.
அவர்களை அந்த நிலையில் இருந்து காத்து ஒளி உலகம் அனுப்ப இறைவனால் நேரடியாக முடியாது.எனவே இறைவன் பூமியில் உள்ள ஏற்கனவே சக்தி அடைந்த ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அவனுக்கு கால சக்கரத்தில் முன்னேற முடியாமல் தவிக்கும் அந்த ஆத்மாக்களை காக்கும் பொறுப்பை கொடுக்கிறார்.
உதாரணமாக,
கர்நாடகவில் ஒரு முக்கிய நபரின் குல தெய்வ சிவலிங்கத்தை ஒரு சக்தி வாய்ந்த பிரேத ஆத்ம தனது கையில் வைத்துள்ளது.அந்த ஆத்மாவின் மரணம் ஒரு துயர சம்பவம்.அந்த குறிப்பிட்ட நபர் பெரும் சிவ பக்தர்.சிவ லிங்கத்திற்காக உயிரையும் கொடுப்பவர்.அவர் ஒரு மலை கோவிலில் வேலை செய்து வந்தார்.அந்த கோவிலின் சொந்த காரர் பெரும் பணக்காரர் மற்றும் அதிகார மிக்கவர் காரணம் அவரின் குல தெய்வம்.இறந்த நபரும் அதே சிவ லிங்கம் மீது அதிக பக்தியை கொண்டிருந்தார்.ஒரு நாள் அவர் அந்த கோவிலை விட்டு வெளியேற்றபட்டார்
ஆனால் அவருக்கு அந்த சிவ லிங்கத்தை விட்டு பிரிய மனமில்லை அதை கோவில் உரிமையாளரிடம் கூறியும் பயனில்லை.அவரை அடித்து விரட்ட உரிமையாளர் கட்டளையிட்டார்.நிறைய நபர்கள் மலை மீது ஏறி அவரை விரட்ட சென்றனர் ஆனால் அந்த நபரோ அனைவரையும் எரித்து விட்டு தானும் அதே இடத்தில் எரிந்து தனது உயிரை மாய்த்து கொண்டார்.கோவில் உரிமை யாளர் சிவ லிங்கத்தை எடுத்து வர கேரளா குருக்களை கொண்டு யாகம் நடத்தினர் ஆனால் சிவ லிங்கத்தை யாராலும் இன்று வரை எடுக்க முடியவில்லை.எடுக்க சென்றவர்கள் மரணம் அடைந்தனர் கரணம் அந்த நபரை பெரும் பக்தி அவரை பிரேத ஆத்மாவாக மாற்றியது.இது சம காலத்தில் நமது பூமியில் நமது அருகில் நடக்கும் மாய குளறுபடி.இதை நான் காட்சியாக கண்டேன் எனது தியானத்தில் விரைவில் இதை சரி செய்து அந்த ஆத்மாவை சிவலோகம் அனுப்ப மனம் துடிக்கிறது.
இது போன்று பல மாய குளறுபடிகளை எங்கள் இயக்கம் சரி செய்து ஆத்மாக்களுக்கு உதவி செய்திருக்கிறது.இனி மேலும் செய்யும் இறைவன் அருளோடு.

Comments