top of page

Vedavith Group of Charitable(GOC) Organization

ஒவ்வொருவருக்கும் ஒரு அதீத சக்தி உள்ளது!

  • Writer: Vedavith Goc
    Vedavith Goc
  • Jun 28
  • 3 min read

ஒவ்வொரு மனிதரும் ஒரு வித்யாசமான அதீத சக்தி அல்லது புறநிலா சக்தியை உள்ளடக்கியவராகவே பிறந்திருக்கிறார்.இந்த சக்திகள் அவர்களுக்கு பிறவியிலேயே உண்டாகும் ஒரு அரிய பாக்கியம். ஆனால் பெரும்பாலானவர்கள், இந்த சக்திகளை உணர்வதோ, கண்டறிவதோ இல்லாமல், அவர்களது சாதாரண வாழ்க்கையின் ஓட்டத்தில் நாள்பட்டபடி வாழ்ந்து வருகின்றனர்.


உண்மையில் மனிதர்களுக்கு முக்கியமானதே இந்த சக்திகள்தான்.தினசரி வாழ்க்கையின் சிரமங்கள், பணம் சம்பாதிப்பு, சமூக மதிப்பீடுகள் இவையெல்லாம் ஒரு அளவிற்கு முக்கியமானவை என்றாலும், மனிதர்களின் உள்ளார்ந்த ஆழத்தில் அவர்கள் மிகவும் விரும்புவது, உணரக்கூடிய அந்த உன்னத சக்தியையே. அது தான் அவர்களின் ஆன்மாவிற்கு உண்மையான மகிழ்ச்சி தரக்கூடியது.


இந்த சக்திகள் மனிதர்களுக்கு தனித்துவமான சந்தோஷத்தையும், நிறைவான வாழ்க்கையின் அனுபவத்தையும் அளிக்கின்றன.பல சந்தர்ப்பங்களில், இந்த சக்திகள் வெளிப்படும் தருணங்கள், சாதாரண நேரங்களில் அல்ல. புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் போது, இயற்கையின் நடுவே அதிக நேரம் செலவழிக்கும் போது அல்லது திடீர் எதையாவது அனுபவிக்கும் தருணங்களில் இந்த சக்திகள் தன்னைத்தானே வெளிக்கொணரத் தொடங்கும்.


பலரும் அனுபவிக்கக் கூடிய ஆனால் விளக்க முடியாத சில தருணங்கள் உள்ளன.பயணங்களை முடித்து வீடு திரும்பிய பின், தூங்கிச் சிறிது நேரத்தில் எழும் போது, சில விநாடிகள் தான், அவர்கள் ஒரு வித்தியாசமான உணர்வில் மூழ்கி இருப்பதை உணரக்கூடிய தருணங்கள்.அவர்கள் பார்த்தது போல, சிலர் வானத்தில் பளிச்சென ஒளிவீசும் சிறிய வெளிச்சங்களை, சிலர் ஒளியால் கிண்டலாகும் விசித்திர உருவங்களை காணக்கூடிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.


இந்தக் காட்சிகள் மிகக் குறுகிய காலத்திலேயே நிகழ்வதாக இருப்பினும், அவை ஆழமான தாக்கங்களை மனதில் ஏற்படுத்துகின்றன.அந்த ஒளிக்கீற்றுகள், அந்த உருவங்கள் – வெறும் கணம் மட்டுமே தோன்றினாலும், அவற்றில் உள்ள அந்த மகத்தான சக்தியை அவர்கள் அவர்களுக்கே உணர்ந்துவிடுகின்றனர். ஆனால் இந்த அனுபவங்களை, அவர்கள் வெளியில் யாரிடமும் பகிர விரும்புவதில்லை.


ஏனென்றால் அவர்கள் அந்த தருணங்களில் தங்களைத் தாங்களே அறியாமல், ஒரு இறையணை நிலைக்கு — அதாவது ஒரு தெய்வீக அலைநிலை (divine frequency) — அடைந்திருக்கிறார்கள்.அந்த நொடிகளில், அவர்களின் மனமும் உடலும், இந்த உலக உணர்வுகளைக் கடந்து, ஏதோ ஒரு மிக உயர்ந்த உணர்வுப்பரப்புக்குள் நுழைந்துவிடுகின்றன.


மேலும், பலருக்கு கனவுகளில் இது நிகழ்வது உண்மையிலேயே நிகழ்வதா என்ற சந்தேகமும் எழுகிறது. பலர் தினமும் தூங்கி எழும் தருணத்தில், இந்த வித்யாசமான விஷயங்களை சில விநாடிகளுக்கு மட்டுமே காண முடிகிறது.


இவை நமக்கு பலவகைகளில் நன்மைகள் செய்வதும் உண்மைதான்.இவை நமது சிந்தனை திறனை தூண்டுகின்றன, நம் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. மேலும் நமது மனதை பரந்துபடச் செய்து, உளஆழத்தில் பயணிக்க உதவுகின்றன.


ஆனால் இந்த சக்திகளின் பின்னால் ஒரு பெரிய அபாயம் மறைந்திருக்கிறது.இவை மிகக் குறைந்த அளவிலேயே வெளிப்பட்டால், அதில் பெரிதாக ஆபத்து இல்லை.


ஆனால் மிகுந்த அளவில் எளிதில் இந்த சக்திகள் வெளிப்பட்டால், அது ஓர் இறை அருள் அல்லது நல்லதையே செய்யும் புறநிலா உயிர்கள் (extraterrestrial beings) வழங்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அவர்கள் நம்மை பாதுகாக்கும் பணி செய்யக்கூடியவர்கள்.


ஆனால் அப்படி இல்லாமல், இருள் உலகத்தின் எல்லைகளில் வாழும் தீய சக்திகளால் இந்த சக்திகள் கொடுக்கப்பட்டிருந்தால், அது நமக்கு விபத்தையும், பாவகரமான செயல்களையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.


அந்த சக்திகள் நம்மை ஏமாற்றி, நம்மை பயன்படுத்தி, பல தீய செயல்களில் ஈடுபட வைக்கலாம். அதன் பின் நம்மையும் அந்த ஆழமான இருள் சக்திகளுக்குள் சிக்க வைத்து விடும்.


எனவே, இந்த சக்திகள் ஒரு வகையில் நன்மையாகவும், மற்றொரு வகையில் தீமையாகவும் இருக்கக்கூடியவை.அவை எந்த முகம் காட்டும் என்பது, அவை எங்கிருந்து வருகிறது, எதற்காக வருகிறது என்பதில்தான் முக்கியத்துவம் உள்ளது.


எனவே, இந்தச் சக்திக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் பயப்படவே கூடாது.வழிப்பாட்டு தளங்கள் (higher dimensional places) செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.


அப்படி நீங்கள் அந்த தலங்களுக்கு பயணிக்கும்போது, உங்கள் சக்தியின் நிலை சிறிது சிறிதாக உயரும்.அதன் விளைவாக, உங்களால் அந்த visuals (காட்சிகள்) அதிக அளவில் தெளிவாகக் காண முடியும்.அந்த நேரத்தில் அந்த சக்தி, நல்ல சக்திகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது உறுதி.


ஒருவேளை அந்த அறிகுறிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில்,அந்த சக்தி இருள் சக்திகளால் வழங்கப்பட்டதுதான் எனும் உறுதி கிடைக்கும்.

அப்படி இருந்தால், மேலும் மேலும் புதிய, உயர்ந்த வழிப்பாட்டு தளங்களை தேடி நீங்கள் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது —அந்த இருளைத் தவிர்த்து, உண்மையான உன்னத சக்தியை அணுகும் வரை அந்த ஆன்மீக தேடல் தொடர வேண்டும்.


இந்த சக்திகள் ஒருவேளை இறைவனால் வழங்கப்பட்டால், அந்த நபரின் வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறும்.


இந்த சக்திகளை உணர்ந்த பிறகு, வெற்றி அவர்களைத் தேடி வரும். வாழ்க்கையில் வளமும் பெருகும், ஆழமான ஆனந்தமும், பெரும் செல்வங்களும் சேரும்.


ஆனால், இந்த செல்வங்கள் அளவுக்கு அதிகமாக சேரும் போது,அவற்றில் நம்மை முழுமையாக தொலைத்துவிடும் அபாயமும் இருக்கும்.

ஏனெனில் நாம் பெற்ற அந்த அதீத சக்திகளை மேம்படுத்தும் முயற்சியை செய்யாமல்,மாறாக நாம் பெற்ற செல்வத்தில் மகிழ்ச்சி அடைய விரும்புகிறோம்.


அந்த சூழ்நிலையில், நாம் அந்த சக்திகளை தாங்கி வைத்திருக்க வேண்டிய ஆற்றலை இழக்கத் தொடங்குவோம். அப்படி ஆகும்போது, நம்மிடம் சேரும் செல்வங்களே அபாயமாக மாறும்.


எனவே, நீங்கள் வெற்றியை நோக்கிச் செல்லும்போதே, உங்கள் சக்தியையும் அதே சமயத்தில் மேம்படுத்தும் முயற்சியையும் தொடர வேண்டும்.மேலும், இந்த சக்தி உங்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? எதற்காக? என்பதை நீங்களே உணர முயற்சி செய்ய வேண்டும்.


பலரும் வெற்றியை அடைந்த பிறகு தோல்வியை சந்திப்பதற்கான முக்கிய காரணம் இதுவே அவர்கள் வெற்றியினால் வந்த செல்வத்தை காத்துக்கொள்ளும் மனநிலை இருந்தாலும்,அதற்குப் பின்னுள்ள தெய்வீக சக்தியை வளர்த்துக்கொள்ள மறந்து விடுகிறார்கள்.


வெறும் கோவிலுக்குச் சென்றாலே இந்த அதீத சக்திகள் நமக்கு நிரந்தரமாக கிடைப்பதில்லை.


ஏனெனில், இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பு வேலை – ஒரு வாழ்க்கைப் பணி – கொடுத்துள்ளார்.


நாம் அந்த பணியை உணர்ந்து, அதை மனம், உளம், உடல் மூன்றாலும் ஆழமாக செய்யும் பொழுதுதான்,


இந்த சக்திகள் நமக்கு நிரந்தரமாக விரிகின்றன. அதுவே உண்மையான வெற்றிக்கான வழியாகும்


பலரும் வெறும் தொழிலைச் செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள்.அந்த தொழிலில் சிறந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்றும் எண்ணுகிறார்கள்.அவர்கள் நம்புவது: "உழைப்பு மட்டுமே வெற்றி தரும்" என்று.ஆனால் உண்மையில், அவர்கள் உழைப்புடன் கூடிய இறைவனால் நியமிக்கப்பட்ட பணியைதாங்களும் அறியாமலே செய்து முடித்து விடுகிறார்கள்.


இது அனைவருக்கும் பொருந்துவது இல்லை.


ஒவ்வொரு மனிதரும் ஒரு வித்யாசமான, தனித்துவமான சக்தியுடன் பிறந்திருக்கிறார்கள் என்பது உண்மை.

அந்த சக்தியை உணர வேண்டும்,அதை வளர்த்தெடுக்க வேண்டும்,அதை வழிகாட்டலுடன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

அப்போதுதான், வெற்றி நம்மைத் தேடி வரும் —அது வெறும் பொருட்செல்வமாக அல்ல, ஆன்மீக நிறைவாகவும், வாழ்க்கையின் உண்மையான பொருளாகவும்!


ஒருவேளை நீங்கள் ஒரு காலத்தில் வெற்றியைப் பெற்றிருந்தீர்கள், ஆனால் பின்னர் மீண்டும் தொடக்க நிலையில் வந்துவிட்டீர்கள் அல்லது அதைவிட கீழே சென்றுவிட்டீர்கள் என்றாலும், பயப்படவேண்டியதில்லை.


ஏனெனில், உங்கள் உள்ளத்தில் இருக்கும் அந்த தெய்வீக சக்தியின் மூலத்தைஅந்த இறைவண் நினைத்தாலும்அழிக்க முடியாது.


னெனில், இந்த சக்தி உங்களை வந்தடைந்ததற்கு காரணம் நீங்கள்.இது உங்கள் ஆன்மாவின் பல பயணங்களின் விளைவாகவும்,இந்த பிரபஞ்சத்தில் உங்கள் முன்னோர்களால் நீங்கள் பெறும் உதவிகளுக்காகவும் ஏற்பட்டது.

இறைவன், உங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான ஒரே காரணம் —உங்களைப் பயன்படுத்தி பல நற்காரியங்களைச் செய்யும் எண்ணமே அவருக்குள் உள்ளது.


அந்த சக்தியை மீண்டும் உயர்த்தி, செயல்படுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டியது அவசியம்.


அதற்குப் பலவகையான ஆன்மீக முயற்சிகள், பயிற்சிகள், பயணங்கள், தியானங்கள் போன்றவை உள்ளன.அவற்றை செய்து, நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் நகர முடியும்.


மேலும், உங்களுக்கு ஏதேனும் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால், எங்களிடம் தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள்.நாங்கள் உங்களுடன் உள்ளோம்.







 
 
 

Recent Posts

See All
பூமியும் மாய குளறுபடிகளும்

பூமி என்பது, நல்லதும் தீயதுமான பல சக்திகள் ஒன்றாக இணைந்து அதாவது இருளும் ஒளியுமாகிய பரிணாமங்களால் உருவானது. இதனால் பூமியில் பல மாய...

 
 
 
மனித உடலும் மாய சக்தியும்

மனித உடலும் இயற்கையாய்கவே வேற்றுஉலக சக்திகளை கிரகிப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனின் சக்தி நிலைகளை கொண்டு தான் அவனது ஆயுள்...

 
 
 

Comments


bottom of page